நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு: மலையகத்தில் சோகம்
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு: மலையகத்தில் சோகம்
நுவரெலியா, நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விடுமுறை தினத்தைக் கழிப்பதற்காகவும் இயற்கையை ரசிப்பதற்காகவும் வருகை தந்த குறித்த இளைஞர்கள், நீரின் ஆழம் மற்றும் சுழியோட்டத்தின் தன்மையை அறியாது ஆற்றில் இறங்கியமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரும், ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மற்றுமொரு இளைஞருமே உயிரிழந்துள்ளனர். உடலங்கள் மீட்கப்பட்டு சட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மலையகப் பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீராடும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், ஆபத்தான நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
නානුඔය ග්ලාසෝ දිය ඇල්ල අසල ගඟේ දිය නෑමට ගිය තරුණයින් දෙදෙනෙකු දියේ ගිලී ජීවිතක්ෂයට
නුවරඑළිය, නානුඔය පොලිස් වසමට අයත් ග්ලාසෝ දිය ඇල්ල ආශ්රිත ගඟේ දිය නෑමට ගිය තරුණයින් දෙදෙනෙකු දියේ ගිලී අවාසනාවන්ත ලෙස ජීවිතක්ෂයට පත්ව තිබේ. නිවාඩු දිනය ගත කිරීම සඳහා පැමිණි මෙම තරුණයින් ජලයේ ගැඹුර සහ සැඩ පහර පිළිබඳව අවබෝධයකින් තොරව ගඟට බැසීම හේතුවෙන් මෙම අනතුර සිදුව ඇත. මෙලෙස මියගොස් ඇත්තේ නානුඔය ප්රදේශයේ පදිංචි 24 හැවිරිදි තරුණයෙකු සහ හපුතලේ ප්රදේශයේ පදිංචි 23 හැවිරිදි තරුණයෙකි. මෘත දේහයන් ගොඩගෙන පශ්චාත් මරණ පරීක්ෂණ කටයුතු සඳහා රෝහල් ගත කර ඇති අතර, නානුඔය පොලීසිය වැඩිදුර විමර්ශන සිදුකරයි. කඳුකර ප්රදේශවල පිහිටි දිය ඇලි සහ ගංගාවන්හි දිය නෑමේදී අවධානයෙන් කටයුතු කරන ලෙසත්, අවදානම් සහිත ස්ථානවලට නොබසින ලෙසත් ආරක්ෂක අංශ ජනතාවගෙන් ඉල්ලා සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Two Youths Drown While Bathing Near Glasgow Falls in Nanu Oya
Two youths tragically drowned while bathing in the river near Glasgow Falls within the Nanu Oya police division in Nuwara Eliya. The victims, who visited the scenic locality to spend their holiday, had reportedly entered the water without being aware of the underwater currents and treacherous depth. The deceased have been identified as a 24-year-old resident of Nanu Oya and a 23-year-old youth hailing from Haputale. Their bodies were recovered and transferred to the hospital for post-mortem examinations, while Nanu Oya police have initiated further investigations into the incident. Authorities have reiterated strict safety advisories urging tourists and youth to exercise caution and avoid stepping into hazardous water bodies and highland waterfalls.
KR TV Network - Local News




Comments