நானுஓயாவில் வேன் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் பலி
நானுஓயாவில் வேன் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் பலி
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தங்கக்கலை, கேம்பிரி தோட்டத்தைச் சேர்ந்த குணசேகரம் திவ்யா (வயது 34) என்ற பெண்ணே இவ்விபத்தில் பலியானவராவார். லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நுவரெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த வேகக் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் பலியான பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / வீதி விபத்து மற்றும் பொலிஸ் புலனாய்வு விவகாரம்
නානුඔයේදී වෑන් රථයක් යතුරුපැදියක ගැටී තරුණියක් එම ස්ථානයේදීම මරුට
නුවරඑළිය - හැටන් ප්රධාන මාර්ගයේ නානුඔය ප්රදේශයේදී සිදුවූ බිහිසුණු රිය අනතුරකින් යතුරුපැදියක ගමන් කළ තරුණියක් එම ස්ථානයේදීම ජීවිතක්ෂයට පත්ව තිබේ.
අනතුරින් මියගොස් ඇත්තේ ලිඳුල තංගකැලේ, කේම්බ්රිජ් වත්තේ පදිංචිව සිටි ගුණසේකරම් දිව්යා නමැති 34 හැවිරිදි තරුණියකි. තංගකැලේ ප්රදේශයේ සිට නුවරඑළිය දෙසට යතුරුපැදියකින් ගමන් කරමින් සිටියදී, ඉදිරියෙන් පැමිණි පාලනයෙන් ගිලිහුණු වෑන් රථයක් මුහුණට මුහුණ ගැටීමෙන් මෙම අනතුර සිදුව ඇත. මියගිය තරුණියගේ සිරුර පශ්චාත් මරණ පරීක්ෂණය සඳහා නුවරඑළිය දිස්ත්රික් මහ රෝහලේ තැන්පත් කර ඇති අතර සිද්ධිය සම්බන්ධයෙන් නානුඔය පොලිසිය වැඩිදුර විමර්ශන පවත්වයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රිය අනතුරු සහ පොලිස් විමර්ශන පුවත්
Fatal Crash in Nanu Oya: Young Woman on Motorcycle Killed in Van Collision
A 34-year-old woman travelling on a motorcycle was killed on the spot following a tragic head-on collision with a van along the Nuwara Eliya - Hatton main road in Nanu Oya.
The deceased has been identified as Gunasekaram Divya (34), a resident of Cambridge Division in Thangakele, Lindula. The fatal accident occurred when an oncoming passenger van, which reportedly lost control at high speed, violently collided with the motorcycle she was operating towards Nuwara Eliya. The victim's body has been placed at the Nuwara Eliya District General Hospital for post-mortem examinations, while Nanu Oya police are continuing further investigations into the incident.
KR TV Network - Local News / Road Accidents and Police Inquiries






Comments