ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்ச்சி - வழமை போல் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்ச்சி - வழமை போல் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை!
புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த இந்தப் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், பொதுமக்களுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க இன்று வழமை போல் ரயில் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / போக்குவரத்துச் செய்தி
දුම්රිය වෘත්තීය සමිති වර්ජනය අදත් ක්රියාත්මකයි සාමාන්ය පරිදි දුම්රිය සේවා පවත්වාගෙන යාමට පියවර!
දුම්රිය සාමාන්යාධිකාරීවරයා ඉවත් කිරීම ඇතුළු ඉල්ලීම් කිහිපයක් මුල් කරගනිමින් දුම්රිය වෘත්තීය සමිති ආරම්භ කළ වර්ජනය අද දිනත් ක්රියාත්මක වන බව දුම්රිය ස්ථානාධිපති සංගමයේ සභාපති සුමේධ සෝමරත්න මහතා පවසයි.
ඒ අනුව, මෙම වර්ජන ක්රියාමාර්ගය අද මධ්යම රාත්රී 12 දක්වා අඛණ්ඩව ක්රියාත්මක වන බව ඔහු සඳහන් කර ඇත.
කෙසේ වෙතත්, දුම්රිය වෘත්තීය සමිති වර්ජනයක් ක්රියාත්මක වුවද, මගී ජනතාවට අපහසුතාවලට මුහුණ දීමට සිදු නොවන අයුරින් අද දිනත් සාමාන්ය පරිදි දුම්රිය සේවා පවත්වාගෙන යාමට කටයුතු කර ඇති බව දුම්රිය ප්රවාහන අධිකාරී අසංක සමරසිංහ මහතා ප්රකාශ කළේය.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / ප්රවාහන පුවත්
Railway Trade Union Strike Continues Today; Authorities Take Steps to Operate Train Services as Normal!
The trade union strike initiated by railway unions—putting forward several demands including the removal of the General Manager of Railways—is continuing today as well, according to Sumeda Somaratne, President of the Railway Station Masters' Union.
He stated that the strike action will remain in effect until midnight today.
Meanwhile, Asanga Samarasinghe, the Deputy/Superintendent of Railway Operations, stated that despite the ongoing union strike, necessary arrangements have been made to continue operating train services as usual to prevent public inconvenience.
KRTV Network | National / Transport News

Comments