Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மட்டக்குளி விபத்து: BYD கார் தானாகவே வேகமடைந்ததாக நீதிமன்றில் சாரதி தெரிவிப்பு

 


மட்டக்குளி விபத்து: BYD கார் தானாகவே வேகமடைந்ததாக நீதிமன்றில் சாரதி தெரிவிப்பு


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


கொழும்பு மட்டக்குளி பகுதியில் செப்டம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் சம்பந்தப்பட்ட BYD மின்சார கார், தனது எந்தவித தூண்டுதலும் இன்றி திடீரென தானாகவே வேகமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகக் காரின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாரதியின் இந்த கூற்று தொடர்பில் ஆராய்வதற்காக, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தலைமையிலான விசேட நிபுணர் குழுவின் மூலம் வாகனத்தில் இயந்திர அல்லது மென்பொருள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் சாரதியை மருத்துவ சபை ஒன்றின் ஊடாக மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இதேவேளை, சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட சந்தேகத்தை அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவர் மதுபானம் அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் அற்றவர் என்றும், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக அவர் அருந்தி வந்த ஆயுர்வேத மருந்துகளின் மூலக்கூறுகளே மருத்துவ பரிசோதனையில் வெளிப்பட்டிருக்கக்கூடும் என்றும் வாதிட்டனர். சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டால் அமைதியின்மை ஏற்படக்கூடும் என பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, சாரதியை செப்டெம்பர் 30 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 பேர் உயிரிழந்து 12 பேர் காயமடைந்துள்ள இவ்விபத்தில், வாகனம் தானாக வேகமடைந்தது என்ற கூற்று இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நீதிமன்றம் மற்றும் விபத்து புலனாய்வு விவகாரம்


මට්ටක්කුලිය අනතුර: BYD මෝටර් රථය ඉබේ වේගවත් වූ බව රියදුරු අධිකරණයට කියයි


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


කොළඹ මට්ටක්කුලිය ප්‍රදේශයේදී සැප්තැම්බර් 16 වන දින සිදුවූ බිහිසුණු රිය අනතුරට සම්බන්ධ BYD විදුලි මෝටර් රථය, තමන්ගේ කිසිදු ක්‍රියාවකින් තොරව හදිසියේම ඉබේ වේගවත් වීම හේතුවෙන් පාලනයෙන් ගිලිහී ගිය බවට අදාළ රියදුරු පොලිසියට ප්‍රකාශ කර ඇති බව අලුත්කඩේ මහේස්ත්‍රාත් අධිකරණයට දැනුම් දී තිබේ.


රියදුරුගේ මෙම ප්‍රකාශය තහවුරු කරගැනීම සඳහා, මෝටර් රථ ප්‍රවාහන කොමසාරිස් ජනරාල්වරයාගේ ප්‍රධානත්වයෙන් යුත් විශේෂඥ කමිටුවක් මඟින් රථයේ යාන්ත්‍රික හෝ තාක්ෂණික දෝෂයක් පැවතියේද යන්න පරීක්ෂා කිරීමට පොලිසිය පියවර ගෙන ඇත. තවද සැකකාර රියදුරුව විශේෂ වෛද්‍ය මණ්ඩලයක් හමුවට පමුණුවා මානසික සෞඛ්‍ය පරීක්ෂණයකට ලක් කිරීමටද සැලසුම් කර ඇත.


රියදුරු ගංජා භාවිත කර ඇති බවට එල්ල වූ චෝදනාව ඔහුගේ නීතිඥවරුන් අධිකරණයේදී තරයේ ප්‍රතික්ෂේප කර ඇති අතර, ඔහු මත්පැන් හෝ මත්ද්‍රව්‍ය භාවිතා කරන්නෙකු නොවන බවත් ඇදුම සහ දියවැඩියාව රෝග සඳහා භාවිත කළ ආයුර්වේද ඖෂධවල බලපෑමක් මෙලෙස වෛද්‍ය පරීක්ෂණයේදී හඳුනාගන්නට ඇති බවත් ඔවුහු පෙන්වා දුන්හ. සැකකරුට ඇප ලබාදුනහොත් මහජන නොසන්සුන්තාවයක් ඇතිවිය හැකි බවට පොලිසිය දැක්වූ විරෝධතාව සලකා බැලූ මහේස්ත්‍රාත්වරයා සැකකරු ලබන 30 දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට නියෝග කළේය. තිදෙනෙකු මියගොස් 12 දෙනෙකු රෝහල්ගතව ප්‍රතිකාර ලබන මෙම අනතුරේ සැබෑ හේතුව සොයා පොලිස් පරීක්ෂණ අඛණ්ඩව ක්‍රියාත්මක වේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ සහ රිය අනතුරු විමර්ශන පුවත්


Mattakkuliya Crash: Driver Claims BYD Electric Car Accelerated Spontaneously


Reporter: Farhana Badurdeen


During legal proceedings at the Hulftsdorp Magistrate’s Court regarding the fatal multi-vehicle crash in Mattakkuliya on September 16, it was revealed that the driver of the BYD electric car claimed to police that the vehicle suddenly accelerated on its own without any input from him, causing him to lose control.


To verify this assertion, police have initiated an investigation through an expert panel headed by the Commissioner General of Motor Traffic to determine whether any mechanical, sensory, or software failure occurred in the vehicle. Police also plan to subject the suspect to a comprehensive psychological evaluation before a medical board.


Defense attorneys strongly contested claims that the driver had consumed cannabis, stating that he does not consume alcohol or narcotics and had instead taken prescribed Ayurvedic medication for asthma and diabetes, which could account for substances detected during clinical tests. The court upheld police objections against granting bail over public order concerns, ordering the driver remanded until September 30. While the tragic crash left 3 dead and 12 hospitalised, the spontaneous acceleration claim remains unverified as investigations continue.


KR TV Network - Local News / Judicial Affairs and Accident Investigations

Comments