Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பன்னாலாவில் திரைப்பட பாணியில் பொலிஸ் அதிரடி நடவடிக்கை: சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து இரு பெண்கள் உட்பட மூவர் கைது පන්නල පොලිස් මෙහෙයුම: අණ නොතකා ධාවනය කළ සුපිරි මෝටර් රථයේ වීදුරු කඩා කාන්තාවන් දෙදෙනෙකු ඇතුළු තිදෙනෙකු අත්අඩංගුවට Dramatic Police Operation in Pannala: Luxury Car Intercepted and Smashed to Arrest Three Suspects Including Two Women


 பன்னாலாவில் திரைப்பட பாணியில் பொலிஸ் அதிரடி நடவடிக்கை: சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து இரு பெண்கள் உட்பட மூவர் கைது

පන්නල පොලිස් මෙහෙයුම: අණ නොතකා ධාවනය කළ සුපිරි මෝටර් රථයේ වීදුරු කඩා කාන්තාවන් දෙදෙනෙකු ඇතුළු තිදෙනෙකු අත්අඩංගුවට

Dramatic Police Operation in Pannala: Luxury Car Intercepted and Smashed to Arrest Three Suspects Including Two Women


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


பொலிஸாரின் உத்தரவை மீறி அதிவேகமாகத் தப்பிச் சென்ற சொகுசு கார் ஒன்றினை துப்பாக்கிச் சூடு நடத்தி, காரின் கண்ணாடிகளை உடைத்து இரு பெண்கள் உட்பட மூன்று சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ள துணிகரச் சம்பவம் ஒன்று இன்று (22) காலை பன்னால நகரில் இடம்பெற்றுள்ளது.


கிரிஉல்ல பொலிஸார் வீதிச் சோதனையின் போது குறித்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டிய போதிலும், அதனைப் பொருட்படுத்தாது கார் நிற்காமல் அதிவேகமாகப் பயணித்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் காரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் வாகனம் தொடர்ந்து தப்பிச் சென்றுள்ளது. உடனடியாகத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், பன்னால நகரில் ஏனைய வாகனங்களை வீதிக்குக் குறுக்கே நிறுத்தி குறித்த சொகுசு காரை முற்றுகையிட்டனர்.


வாகனம் முற்றுகையிடப்பட்ட பின்னரும் சாரதி காரின் கதவுகளை உட்பக்கமாகப் பூட்டிக்கொண்டு வெளியேற மறுத்துள்ளார். இதன்போது சம்பவ இடத்திலிருந்த பொலிஸார் டி-56 ரக துப்பாக்கியை நீட்டி கதவுகளைத் திறக்குமாறு இறுதி எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் சாரதி கதவைத் திறக்காத காரணத்தால், துரிதமாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் காரின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து, கதவுகளைத் திறந்து உள்ளே இருந்த ஆண் சாரதியையும் இரண்டு பெண்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபரிடமிருந்து சிறிதளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சட்டம் மற்றும் குற்றத் தடுப்பு விவகாரம்


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


පොලිස් අණ නොතකා අධික වේගයෙන් පළාගිය සුපිරි මෝටර් රථයකට වෙඩි තබා හඹාගොස්, එහි වීදුරු කඩා දමා කාන්තාවන් දෙදෙනෙකු ඇතුළු සැකකරුවන් තිදෙනෙකු අත්අඩංගුවට ගැනීමේ නාටකීය මෙහෙයුමක් අද (22) පෙරවරුවේ පන්නල නගරයේදී සිදුව තිබේ.


ගිරිඋල්ල පොලිස් නිලධාරීන් විසින් මාර්ග බාධකයේදී නවත්වන ලෙස සංඥා කළ ද, එය නොතකා රථය වේගයෙන් ධාවනය කර ඇති අතර එහිදී නිලධාරීන් වෙඩි තැබීමක් ද සිදුකර ඇත. එහෙත් රථය නොනවත්වා ධාවනය වීම නිසා වහා ක්‍රියාත්මක වූ පොලිසිය, පන්නල නගරයේදී වෙනත් වාහන කිහිපයක් මාර්ගයට හරස් කරමින් රථය වටලා නතර කර ගැනීමට සමත් විය.


වාහනය නැවැත්වූ පසුව ද රියදුරා දොරවල් අගුළුලාගෙන වාහනය තුළ රැඳී සිටි අතර, පොලිස් නිලධාරීන් ටී-56 ගිනිඅවියක් එල්ල කර දොරවල් අරින ලෙස දැඩි අවවාද සිදු කළ ද එය ප්‍රතික්ෂේප කර තිබේ. ඒ අනුව ක්‍රියාත්මක වූ නිලධාරීන් මෝටර් රථයේ වීදුරු කඩා දමා දොරවල් ඇර සැකකාර රියදුරා සහ එහි සිටි කාන්තාවන් දෙදෙනා සිය භාරයට ගෙන ඇත. අත්අඩංගුවට ගත් පිරිමි පුද්ගලයා සන්තකයේ තිබී මත්ද්‍රව්‍ය බවට සැකකෙරෙන සුළු ප්‍රමාණයක් සොයාගෙන ඇති අතර, මොවුන් තිදෙනාම ගිරිඋල්ල ප්‍රදේශයේ පදිංචිකරුවන් බව තහවුරු වී තිබේ. සිද්ධිය සම්බන්ධයෙන් පොලිසිය වැඩිදුර විමර්ශන පවත්වයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / නීතිය සහ අපරාධ වැළැක්වීමේ පුවත්


Reporter: Farhana Badurdeen


In a cinematic daytime pursuit, police officers intercepted a luxury vehicle that defied road signals, opened gunfire, and smashed the car's windows to arrest three suspects, including two women, in Pannala town earlier today (22).


Officers from the Giriulla Police had signaled the vehicle to stop during routine surveillance; however, the driver sped through the checkpoint. Despite warning shots discharged by the officers, the vehicle continued to flee at high speed. Police units gave chase and successfully blockaded the path in Pannala town by maneuvering multiple vehicles across the road.


Even after being encircled, the driver locked the doors from inside and refused to exit. Armed officers leveled a T-56 assault rifle, issuing repeated warnings to unlock the vehicle. Following continued defiance, officers shattered the car windows, forced open the doors, and apprehended the male driver along with the two female occupants. Police recovered a small quantity of suspected illicit narcotics from the driver's possession, confirming that all three suspects are residents of Giriulla. Further investigations are underway.


KR TV Network - Local News / Law Enforcement and Crime Prevention

Comments