Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் சந்தேக நபர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்: உச்சக்கட்ட பாதுகாப்பு පාස්කු බෝම්බ ප්‍රහාර නඩුවේ සැකකරුවන් කොළඹ මහාධිකරණය වෙත රැගෙන එයි: දැඩි ආරක්ෂක රැකවල් Easter Sunday Terror Attack Suspects Brought to Colombo High Court Under Tight Security









 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் சந்தேக நபர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்: உச்சக்கட்ட பாதுகாப்பு

පාස්කු බෝම්බ ප්‍රහාර නඩුවේ සැකකරුවන් කොළඹ මහාධිකරණය වෙත රැගෙන එයි: දැඩි ආරක්ෂක රැකවල්

Easter Sunday Terror Attack Suspects Brought to Colombo High Court Under Tight Security


2019 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் சந்தேக நபர்கள் அனைவரும், விசேட சிறைச்சாலை பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.


இவ்வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இன்று (22) வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு, புதுக்கடை (அலுத்கடை) நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் சிறப்புப் பொலிஸ் பிரிவுகள் குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் நீதிமன்றக் கட்டடத்திற்குள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள அனைத்து பிரதான வீதிகளிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நீதித்துறை மற்றும் பாதுகாப்பு விவகாரம்


2019 වසරේ සිදුවූ පාස්කු ඉරිදා මරාගෙන මැරෙන බෝම්බ ප්‍රහාර මාලාවට අදාළ ප්‍රධාන නඩුවේ සැකකරුවන් සියලු දෙනා විශේෂ බන්ධනාගාර රථ මඟින් පොලිස් විශේෂ කාර්ය බලකායේ දැඩි ආරක්ෂාව මධ්‍යයේ මීට සුළු මොහොතකට පෙර කොළඹ මහාධිකරණ සංකීර්ණය වෙත රැගෙන එනු ලැබීය.


මෙම නඩුවේ ඓතිහාසික තීන්දුව කොළඹ ත්‍රිපුද්ගල විශේෂ මහාධිකරණ විනිසුරු මඩුල්ල විසින් අද (22) ප්‍රකාශයට පත් කිරීමට නියමිතව තිබීම හේතුවෙන්, අලුත්කඩේ අධිකරණ සංකීර්ණය අවට පෙර නොවූ විරූ අන්දමින් යුද හමුදාව, පොලිස් විශේෂ කාර්ය බලකාය සහ විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා දැඩි ආරක්ෂක රැකවල් තර කර තිබේ. සැකකරුවන් අධිකරණය වෙත රැගෙන ඒමත් සමඟ අධිකරණ භූමියට ඇතුළු වන ප්‍රධාන මාර්ගයන්හි දැඩි සෝදිසි කිරීම් සහ විශේෂ ආරක්ෂක විධිවිධාන ක්‍රියාත්මක කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ සහ ආරක්ෂක පුවත්


Suspects indicted in the 2019 Easter Sunday coordinated suicide bomb attacks have been brought to the Colombo High Court premises under heavily armed prison convoys and elite Special Task Force security details.


With the landmark verdict of the trial set to be formally handed down by the Colombo Special High Court Trial-at-Bar bench today (22), an unprecedented security perimeter comprising the Sri Lanka Army, the Police Special Task Force, and specialized police units has cordoned off the Hulftsdorp court complex. Following the arrival of the suspects, heightened search operations, barricades, and strict movement controls were immediately activated across all roadway perimeters approaching the court compound.


KR TV Network - Local News / Judicial Affairs and Homeland Security

Comments