Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அனோஜன் விவகாரம்: அரசியல் மற்றும் சமூக வலைத்தள வெளிப்பாடுகள் விடுதலையைப் பாதிக்கும் என அச்சம்; இராஜதந்திர நகர்வுகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது KR TV අනුජන්ගේ සිදුවීම: දේශපාලන සහ සමාජ මාධ්‍ය හැසිරීම් නිදහසට බාධාවක් විය හැකි බවට බියක්; රාජ්‍යතාන්ත්‍රික ප්‍රයත්නයන්ගේ අත්‍යවශ්‍යතාව KR TV අවධාරණය කරයි Anojan Issue: Concerns mount that political and social media exposure may hinder release; KR TV strongly emphasizes the critical need for diplomatic engagement

 


அனோஜன் விவகாரம்: அரசியல் மற்றும் சமூக வலைத்தள வெளிப்பாடுகள் விடுதலையைப் பாதிக்கும் என அச்சம்; இராஜதந்திர நகர்வுகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது KR TV

අනුජන්ගේ සිදුවීම: දේශපාලන සහ සමාජ මාධ්‍ය හැසිරීම් නිදහසට බාධාවක් විය හැකි බවට බියක්; රාජ්‍යතාන්ත්‍රික ප්‍රයත්නයන්ගේ අත්‍යවශ්‍යතාව KR TV අවධාරණය කරයි

Anojan Issue: Concerns mount that political and social media exposure may hinder release; KR TV strongly emphasizes the critical need for diplomatic engagement


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் இராஜதந்திர முயற்சிகளுக்கு, உள்நாட்டு அரசியல் தலையீடுகள் மற்றும் சமூக வலைத்தளங்களிலான பொறுப்பற்ற கருத்துப் பரிமாற்றங்கள் பாரிய முட்டுக்கட்டையாக அமையக்கூடும் என KR TV நெட்வொர்க் கவலை வெளியிட்டுள்ளது.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனோஜனின் குடும்பத்தினரைச் சந்தித்த போது சிறையிலுள்ள அனோஜனுடன் நேரடித் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தியமை இராஜதந்திர ரீதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, அனோஜன் தொலைபேசியில் உரையாடும் போது, தான் இலங்கையில் இருந்துகொண்டே முகநூலைப் பயன்படுத்தியதாகவும், சவூதி அரேபியா எவ்வாறு தண்டிக்க முடியும் என்றும் எழுப்பிய கேள்விகள், சவூதி நீதித்துறை மற்றும் மன்னரின் அதிகாரத்திற்கு சவால் விடுப்பதாக அமைந்து பொதுமன்னிப்பு முயற்சிகளைக் கடுமையாகப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.


அதேவேளை, இச்சம்பவத்தை மையப்படுத்தி உள்நாட்டில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இன முரண்பாடுகளைத் தூண்டும் வகையிலான கருத்துக்களும், மோசமான வார்த்தைப் பிரயோகங்களும் முகநூல் உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது ஒரு உயிர் சார்ந்த மிகவும் உணர்ச்சிகரமான விடயம் என்பதால், கருத்துத் தெரிவிப்பவர்கள் எளிதாகக் கடந்து செல்லக்கூடும்; ஆனால் அதன் நேரடிப் பாதிப்பை அனோஜன் மட்டுமே சிறையில் அநுபவிக்க நேரிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். சவூதி அரேபியாவின் கடுமையான சட்டத் திட்டங்களைக் கருத்திற்கொண்டு, தேவையற்ற அரசியல் விளம்பரங்கள் மற்றும் இனவாதக் கருத்துக்களைத் தவிர்த்து, முழுமையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் மன்னருக்கான கருணை மனுக்கள் ஊடாக மட்டுமே அமைதியான முறையில் அனோஜனின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது KR TV நெட்வொர்க்கின் உறுதியான ஊடகக் கருத்தாகும்.


கே ஆர் டி வி நெட்வොர்க் - உள்நாட்டுச் செய்தி / இராஜதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்பு விவகாரம்


සවුදි අරාබියේදී මරණ දඬුවම නියම වී සිටින ශ්‍රී ලාංකික තරුණයෙකු වන ශිවරාසා අනුජන් නිදහස් කරගැනීම සඳහා ක්‍රියාත්මක වන රාජ්‍යතාන්ත්‍රික ප්‍රයත්නයන්ට, දේශීය දේශපාලන මැදිහත්වීම් සහ සමාජ මාධ්‍ය හරහා සිදුවන වගකීම් විරහිත හැසිරීම් දැඩි බාධාවක් විය හැකි බවට KR TV නෙට්වර්ක් දැඩි කනස්සල්ල පළ කරයි.


විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස මහතා, අනුජන්ගේ පවුලේ ඥාතීන් හමුවූ අවස්ථාවේදී බන්ධනාගාරයේ පසුවන අනුජන් සමඟ සෘජු දුරකථන සබැඳියක් ගොඩනඟා එය සමාජ මාධ්‍ය ඔස්සේ ප්‍රසිද්ධියට පත් කිරීම රාජ්‍යතාන්ත්‍රික මට්ටමින් අවාසිදායක තත්ත්වයක් ඇති කළ හැකි බව විචාරකයින් පෙන්වා දෙති. විශේෂයෙන්ම, තමන් ලංකාවේ සිට ෆේස්බුක් පරිහරණය කළ බවත්, සවුදි අරාබියට තමන්ට දඬුවම් කළ හැක්කේ කෙසේද යන්නත් අනුජන් දුරකථනයෙන් ප්‍රකාශ කිරීම, සවුදි අධිකරණ පද්ධතියට සහ රජුගේ බලයට අභියෝග කිරීමක් ලෙස අර්ථකථනය විය හැකි බැවින්, රාජකීය සමාව ලබාගැනීමේ උත්සාහයන්ට එය දැඩි හානියක් විය හැකි බවට බියක් පවතී.


එමෙන්ම, මෙම සිදුවීම මුල්කරගනිමින් මෙරට තුළ සමාජ මාධ්‍ය ඔස්සේ ජාතිවාදී ගැටුම් ඇතිකිරීමට ඉවහල් වන අදහස් සහ අශිෂ්ට වචන භාවිත කරමින් ෆේස්බුක් ඇතුළු මාධ්‍ය ඔස්සේ සටහන් පළවෙමින් පවතී. මෙය ජීවිතයක් හා බැඳුණු ඉතා සංවේදී කරුණක් බැවින්, අදහස් දක්වන්නන්ට එය පහසුවෙන් අමතක කර දැමිය හැකි වුවද, එහි සෘජු බලපෑමට බන්ධනාගාරයේ සිටින අනුජන්ට පමණක් මුහුණ දීමට සිදුවන බව සියලු දෙනා වටහා ගත යුතුය. සවුදි අරාබියේ පවතින දැඩි නීති පද්ධතිය සැලකිල්ලට ගෙන, අනවශ්‍ය දේශපාලන ප්‍රචාරණයන් සහ ජාතිවාදී අදහස්වලින් බැහැරව, පූර්ණ රාජ්‍යතාන්ත්‍රික සාකච්ඡා සහ රජු වෙත ඉදිරිපත් කරන කරුණා ආයාචනා මඟින් පමණක් අනුජන්ගේ ජීවිතය බේරාගත හැකි බව KR TV නෙට්වර්ක්හි ස්ථාවර මාධ්‍ය මතයයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රාජ්‍යතාන්ත්‍රික සහ සමාජ වගකීම් පුවත්


KR TV Network raises grave concerns that domestic political interventions and irresponsible social media conduct are severely jeopardizing diplomatic efforts aimed at securing the release of Sivarasa Anojan, the Sri Lankan national facing execution in Saudi Arabia.


Observers warn that Opposition Leader Sajith Premadasa’s action of establishing a direct telephone link with Anojan in prison and publicizing it live on social media platforms during his visit to the youth’s family could yield counterproductive diplomatic consequences. Crucially, Anojan’s televised statements questioning Saudi Arabia’s jurisdictional authority over Facebook activity engaged from within Sri Lanka risk being interpreted as a direct challenge to the Saudi judiciary and the King’s prerogative of mercy, potentially handicapping clemency negotiations.


Simultaneously, KR TV Network notes with deep concern the proliferation of inflammatory racial rhetoric and abusive language across social media platforms, including Facebook, centering on this issue. While those commenting may easily detach themselves from the consequences, it is imperative for all Sri Lankans to realize that Anojan alone remains imperiled in detention and would directly bear the adverse impact of such volatility. Given Saudi Arabia’s stringent legal codes, KR TV Network maintains its strong media stance that eschewing political posturing and ethnic incitement in favor of structured, behind-the-scenes diplomatic engagement and direct appeals for royal pardon represents the only viable path to save Anojan’s life.


KR TV Network - Local News / Diplomatic and Social Responsibility Affairs

Comments