Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டம்: காத்தான்குடி நகர சபைக்கு நவீன கடற்கரை துப்புரவு இயந்திரம் வழங்கி வைப்பு – நகர முதல்வர் S.H.M. அஸ்பர் பெற்றுக்கொண்டார்!

 கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டம்: காத்தான்குடி நகர சபைக்கு நவீன கடற்கரை துப்புரவு இயந்திரம் வழங்கி வைப்பு – நகர முதல்வர் S.H.M. அஸ்பர் பெற்றுக்கொண்டார்!













"கிளீன் ஸ்ரீலங்கா" (Clean Sri Lanka) செயலகம், சுற்றாடல் அமைச்சு மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில், சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தின தேசிய வேலைத்திட்டம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு "அத்தம" தேசிய நிகழ்வு நேற்று (19.09.2026) காலை பாணந்துறை பீச் பார்க்கில் வெற்றிகரமாக இடம்பெற்றது.


இந்நாட்டின் தெரிவு செய்யப்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நவீன Beachtech கடற்கரை துப்புரவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


அதற்கமைய, பாணந்துறை நகர சபை, திருகோணமலை மாநகர சபை, காத்தான்குடி நகர சபை, பொத்துவில் பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்கு இவ்வியந்திரங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.


தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டாச்சி, கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் தலைவரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான பொறியியலாளர் சுகீஷ்வர மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தவிசாளர் கலாநிதி சமந்த குணசேகர ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


வேகமாக சுற்றுலாத்தளமாக மாறிவரும் காத்தான்குடி கடற்கரையை அழகுபடுத்தும் முகமாக காத்தான்குடி நகர சபையால் முன்வைக்கப்பட்ட திட்டமுன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நவீன இயந்திரம் காத்தான்குடி நகர சபை முதல்வர் S.H.M. அஸ்பர் (JP) அவர்களிடம் வைபவ ரீதியாகக் கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினர், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பாணந்துறை கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணியிலும் ஈடுபட்டனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / சுற்றுச்சூழல் & உள்ளூராட்சிச் செய்தி


"ක්ලීන් ශ්‍රී ලංකා" ජාතික වැඩසටහන යටතේ කාත්තන්කුඩි නගර සභාවට නවීන වෙරළ පවිත්‍රතා යන්ත්‍රයක් ප්‍රදානය කෙරේ – නගරාධිපති එස්.එච්.එම්. අස්පර් විසින් එය බාර ගනියි!


"ක්ලීන් ශ්‍රී ලංකා" ලේකම් කාර්යාලය, පරිසර අමාත්‍යාංශය සහ සමුద్రීය පරිසර ආරක්ෂණ අධිකාරිය යන ආයතනවල සංවිධායකත්වයෙන්, ජාත්‍යන්තර වෙරළ පවිත්‍රතා දිනය සහ ජාතික සමුద్రීය සම්පත් ආරක්ෂණ සතිය මුල් කරගනිමින් "අත්තම" ජාතික වැඩසටහන ඊයේ (19.09.2026) පානදුර බීච් පාර්ක් හිදී සාර්ථකව පවත්වන ලදී.


දිවයින පුරා තෝරාගත් ප්‍රාදේශීය ආයතන 5ක් සඳහා නවීන Beachtech වෙරළ පවිත්‍රතා යන්ත්‍ර මෙහිදී බෙදා දෙන ලදී.


ඒ අනුව, පානදුර නගර සභාව, ත්‍රිකුණාමලය මහ නගර සභාව, කාත්තන්කුඩි නගර සභාව, පොතුවිල් ප්‍රාදේශීය සභාව සහ කෝරළේපත්තුව ප්‍රාදේශීය සභාව යන ආයතන වෙත මෙම යන්ත්‍ර නිල වශයෙන් ප්‍රදානය කරන ලදී.


ජාතික ජන බලවේගයේ කළුතර දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී නිලාන්ති කොට්ටාච්චි, 'ක්ලීන් ශ්‍රී ලංකා' ලේකම් කාර්යාලයේ ප්‍රධානී මෙන්ම ජනාධිපති අතිරේක ලේකම් ඉංජිනේරු සුගීෂ්වර සහ සමුද්‍රීය පරිසර ආරක්ෂණ අධිකාරියේ සභාපති ආචාර්ය සමන්ත ගුණසේකර යන මහත්ම මහත්මීන් ප්‍රධාන ආරාධිතයන් ලෙස සහභාගී වූහ.


සංචාරක නගරයක් ලෙස ශීඝ්‍රයෙන් වර්ධනය වන කාත්තන්කුඩි වෙරළ තීරය අලංකාර කිරීම සඳහා කාත්තන්කුඩි නගර සභාව විසින් ඉදිරිපත් කරන ලද යෝජනාව පිළිගනිමින්, අදාළ නවීන යන්ත්‍රය කාත්තන්කුඩි නගර සභාවේ ගරු නගරාධිපති එස්.එච්.එම්. අස්පර් (JP) මහතා වෙත උත්සවශ්‍රීයෙන් ප්‍රදානය කරන ලදී.


මෙම අවස්ථාවට නගර සභා ලේකම්, පරිපාලන නිලධාරී, සැලසුම් අංශයේ නිලධාරීන් ඇතුළු පිරිසක් සහභාගී වූ අතර, පසුව පානදුර වෙරළ තීරය පවිත්‍ර කිරීමේ ශ්‍රමදානයකටද ඔවුන් එක් වූහ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / පරිසර සහ පාලන ප්‍රවෘත්ති


Farhana Badruddin

Headline: "Clean Sri Lanka" National Initiative: Modern Beach Cleaning Machine Handed Over to Kathankudi Urban Council – Received by Mayor S.H.M. Aspar!


Organized by the "Clean Sri Lanka" Secretariat, the Ministry of Environment, and the Marine Environment Protection Authority (MEPA) in conjunction with International Coastal Cleanup Day and National Marine Resources Protection Week, the "Aththama" national event was successfully held yesterday (September 19, 2026) at the Panadura Beach Park.


Modern Beachtech beach-cleaning machinery was distributed to five selected local government institutions across the island.


Accordingly, equipment was officially handed over to the Panadura Urban Council, Trincomalee Municipal Council, Kathankudi Urban Council, Pottuvil Pradeshiya Sabha, and Koralai Pattu Pradeshiya Sabha.


The event was graced by National People's Power Kalutara District Member of Parliament Nilanthi Kottachchi, Clean Sri Lanka Secretariat Head and Additional Secretary to the President Engineer Sugeeshwara, and MEPA Chairman Dr. Samantha Gunasekera as chief guests.


Recognizing the proposal submitted by the Kathankudi Urban Council to beautify its rapidly growing coastal tourism zones, the advanced beach cleaning machine was ceremoniously handed over to Kathankudi Urban Council Mayor S.H.M. Aspar (JP).


The Council’s Secretary, Administrative Officer, and Planning Division officials, alongside tri-forces and community representatives, participated in the event and joined the subsequent beach cleanup drive at Panadura Beach.


KRTV Network | National / Environment & Governance News

Comments