Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவூதி பொது இராஜதந்திர பிரதி அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் සවුදි රාජ්‍ය තාන්ත්‍රික නියෝජ්‍ය අමාත්‍යවරයා සහ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වඩ් අතර හමුවක් Sri Lankan Ambassador Ameer Ajwad Holds Talks with Saudi Deputy Minister for Public Diplomacy

 



சவூதி பொது இராஜதந்திர பிரதி அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்

සවුදි රාජ්‍ය තාන්ත්‍රික නියෝජ්‍ය අමාත්‍යවරයා සහ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වඩ් අතර හමුවක්

Sri Lankan Ambassador Ameer Ajwad Holds Talks with Saudi Deputy Minister for Public Diplomacy


சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒமர் லெப்பை அமீர் அஜ்வத், சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சின் பொது இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கலாநிதி ராயித் பின் அப்துல்லா அல்-குர்மிலியை (Dr. Raed bin Abdullah Al-Kurmaili) ரியாத்தில் உள்ள அமைச்சு வளாகத்தில் உத்தியோகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.


இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்சார் விவகாரங்கள், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். அத்துடன் இலங்கைக்கும் சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால வரலாற்று ரீதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீள உறுதிப்படுத்தினர். இச்சந்திப்பில் தூதுவருடன் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளரும் சான்சரியின் தலைவருமான தமித்ரி சமங்கிகாவும் கலந்துகொண்டதாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேசச் செய்தி / இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகள் விவகாரம்


සවුදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති ඕමර් ලෙබ්බේ අමීර් අජ්වඩ් මහතා, සවුදි අරාබි විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ රාජ්‍ය තාන්ත්‍රික කටයුතු පිළිබඳ නියෝජ්‍ය අමාත්‍ය ආචාර්ය රායිද් බින් අබ්දුල්ලා අල්-කුර්මයිලි (Dr. Raed bin Abdullah Al-Kurmaili) මහතා රියාද් නුවරදී නිල වශයෙන් හමුවී තිබේ.


මෙම හමුවේදී දෙරටටම පොදු වූ වැදගත් කරුණු මෙන්ම ශ්‍රී ලංකාව සහ සවුදි අරාබි රාජධානිය අතර ද්විපාර්ශ්වික සහයෝගීතාව සහ සබඳතා තවදුරටත් පුළුල් කරගැනීමේ මාර්ග පිළිබඳව දෙපාර්ශවය අතර අදහස් හුවමාරු කරගෙන ඇත. තවද ශ්‍රී ලංකාව සහ සවුදි අරාබිය අතර පවතින දීර්ඝකාලීන මිත්‍රත්වය සහ සහෝදරත්වය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා දෙපාර්ශ්වයේම පවතින කැපවීම මෙහිදී යළි තහවුරු කෙරිණි. මෙම නිල හමුව සඳහා තානාපතිවරයා සමඟ තානාපති කාර්යාලයේ දෙවන ලේකම් දමිත්‍රි සමංගිකා මෙනවිය ද සහභාගී වූ බව රියාද්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය නිවේදනය කරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / රාජ්‍යතාන්ත්‍රික සහ ද්විපාර්ශ්වික සබඳතා පුවත්


Sri Lanka’s Ambassador to the Kingdom of Saudi Arabia, Omar Lebbe Ameer Ajwad, met with the Deputy Minister for Public Diplomacy of the Ministry of Foreign Affairs of Saudi Arabia, Dr. Raed bin Abdullah Al-Kurmaili, in Riyadh.


During the diplomatic audience, both sides engaged in fruitful discussions concerning areas of mutual interest, exploring constructive pathways to further enhance bilateral engagement and multidimensional cooperation between Sri Lanka and Saudi Arabia. The meeting served to reaffirm the joint commitment of both nations to consolidate their longstanding and cordial historical relations. Ambassador Ameer Ajwad was accompanied by Second Secretary and Head of Chancery Ms. Damithri Samangika, according to an official statement issued by the Embassy of Sri Lanka in Riyadh.


KR TV Network - International News / Diplomatic and Bilateral Affairs

Comments