வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை கெச்சிமலை தர்காவின் புனித புஹாரி மஜ்லிஸ் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பம் ඓතිහාසික බේරුවල කෙච්චිමලෙයි දර්ගාවේ වාර්ෂික බුහාරි මජ්ලිස් ආගමික වැඩසටහන 12 වනදා ආරම්භ වෙයි Historic Ketchimalai Dargah's Annual Bukhari Majlis to Commence on October 12
வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை கெச்சிமலை தர்காவின் புனித புஹாரி மஜ்லிஸ் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பம்
ඓතිහාසික බේරුවල කෙච්චිමලෙයි දර්ගාවේ වාර්ෂික බුහාරි මජ්ලිස් ආගමික වැඩසටහන 12 වනදා ආරම්භ වෙයි
Historic Ketchimalai Dargah's Annual Bukhari Majlis to Commence on October 12
வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை, கெச்சிமலை தர்ஹாவில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ரவி ஆகிய புனித ஹதீஸ் கிரந்தங்களின் பாராயண மஜ்லிஸ் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அஷ்ஷெய்ஹ் மௌலவி ஸக்கி அஹமத் பின் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் காலிப் அலவி ஆலிம் தலைமையில் ஆரம்பமாகும் இந்த ஆன்மீக நிகழ்வில் நாடளாவிய ரீதியிலுள்ள மார்க்க அறிஞர்கள், உலமாக்கள் மற்றும் முரீதீன்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் ஹதீஸ் பாராயணமும் விஷேட மார்க்கச் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளதுடன், நவம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தமாம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன் முக்கிய நிகழ்வாக நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஹத்தாத் ராதிப், விஷேட மார்க்கச் சொற்பொழிவு மற்றும் தர்காவில் அடங்கப்பட்டுள்ள அஷ்ஷெய்க் அஷ்ரப் வலியுல்லாஹ் அவர்களின் ஸியாரத் நிகழ்வும், தொடர்ந்து 15ஆம் திகதி அதிகாலை அல்குர்ஆன் தமாம் வைபவமும் நடைபெறவுள்ளன. இந்நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவர் என்பதால், நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களிலும் தர்கா வளாகத்திற்குப் பெண்கள் வருகை தருவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகப் பேருவளை பொலிஸார் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / ஆன்மீக விவகாரம்
ඓතිහාසික බේරුවල කෙච්චිමලෙයි දර්ගා පරිශ්රයේදී වාර්ෂිකව පැවැත්වෙන සහීහ් අල් බුහාරි, සහීහ් මුස්ලිම් ඇතුළු ශුද්ධ වූ හදීස් ග්රන්ථ සජ්ඣායනා කිරීමේ වාර්ෂික ආගමික වැඩසටහන ලබන 12 වන සඳුදා අලුයම 4.00ට ආරම්භ වීමට නියමිතය.
අෂ්-ෂෙයික් මව්ලවි සකී අහමඩ් තුමන්ගේ ප්රධානත්වයෙන් ආරම්භ වන මෙම ආගමික මහෝත්සවය සඳහා දිවයිනේ නන් දෙසින් ඉස්ලාමීය ආගමික විද්වතුන් සහ බැතිමතුන් විශාල පිරිසක් සහභාගි වීමට නියමිතව ඇත. සිකුරාදා දින හැර සෙසු දිනවලදී හදීස් දේශනා සහ ආගමික වැඩසටහන් පැවැත්වෙන අතර, නොවැම්බර් මස 15 වන ඉරිදා පෙරවරුවේ සමාප්ති උත්සවය පැවැත්වේ.
නොවැම්බර් 14 වන සෙනසුරාදා රාත්රියේ විශේෂ ආගමික වතාවත් සහ දර්ගාවේ තැන්පත් කර ඇති අෂ්-ෂෙයික් අෂ්රෆ් වලියුල්ලාහ් තුමන්ගේ සියාරත් වැඩසටහන පැවැත්වෙන අතර, 15 වනදා අලුයම අල්-කුර්ආන් සමාප්ති ආගමික වතාවත් සිදුකිරීමට සැලසුම් කර ඇත. මෙම අවසන් දින දෙක තුළ දිවයින පුරා විසිරී සිටින බැතිමතුන් විශාල වශයෙන් පැමිණෙන බැවින්, නොවැම්බර් 14 සහ 15 යන දෙදින තුළ දර්ගා පරිශ්රය වෙත කාන්තාවන් පැමිණීම සම්පූර්ණයෙන්ම තහනම් කර තිබේ. එමෙන්ම පැමිණෙන බැතිමතුන්ගේ ආරක්ෂාව තහවුරු කිරීම වෙනුවෙන් බේරුවල පොලිසිය විසින් විශේෂ ආරක්ෂක වැඩපිළිවෙළක් ක්රියාත්මක කර ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ආගමික පුවත්
The annual recital majlis of sacred Hadith scriptures, including Sahih al-Bukhari, Sahih Muslim, and Mashra'ur-Rawi, at the historic Ketchimalai Dargah in Beruwala is scheduled to commence on Monday, October 12, at 4:00 AM.
Presided over by Ash-Sheikh Moulavi Zakky Ahmed, the sacred recitals will be attended by renowned Islamic theologians, religious scholars, and disciples from across the island. The daily Hadith recitations and sermons will proceed on all days except Fridays, leading to the grand culmination ceremonies on Sunday, November 15.
Key religious observances will take place on Saturday night, November 14, comprising the Ratib al-Haddad, special spiritual discourses, and the Ziyarat of the revered saint Ash-Sheikh Ashraf Waliyullah. This will be followed by the completion of the Holy Quran recitals in the early hours of November 15. To manage the immense congregations expected nationwide, the entry of female devotees to the shrine has been restricted on November 14 and 15. The Beruwala Police have instituted dedicated security and crowd management arrangements to ensure public safety throughout the proceedings.
KR TV Network - Local News / Religious Affairs

Comments