திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் 12 இலட்சம் ரூபாய்க்கும் அதிக கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது ත්රිකුණාමලය බන්ධනාගාරයේ සහකාර අධිකාරිවරයා රුපියල් ලක්ෂ 12කට වැඩි අල්ලසක් ලබාගැනීමේ චෝදනාව මත අල්ලස් කොමිසමෙන් අත්අඩංගුවට Trincomalee Prison Assistant Superintendent Arrested by Bribery Commission for Allegedly Accepting Over Rs. 1.2 Million Bribe
திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் 12 இலட்சம் ரூபாய்க்கும் அதிக கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது
ත්රිකුණාමලය බන්ධනාගාරයේ සහකාර අධිකාරිවරයා රුපියල් ලක්ෂ 12කට වැඩි අල්ලසක් ලබාගැනීමේ චෝදනාව මත අල්ලස් කොමිසමෙන් අත්අඩංගුවට
Trincomalee Prison Assistant Superintendent Arrested by Bribery Commission for Allegedly Accepting Over Rs. 1.2 Million Bribe
திருகோணமலை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர், சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே வைத்து கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உணவு வழங்கும் பணிகளை முன்னெடுக்கும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கையூட்டலாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / ஊழல் ஒழிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள்
ත්රිකුණාමලය බන්ධනාගාරයේ සහකාර අධිකාරිවරයෙකු බන්ධනාගාර පරිශ්රය තුළදීම අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ නිලධාරීන් විසින් අද (06) අත්අඩංගුවට ගෙන තිබේ.
බන්ධනාගාරයේ රඳවා සිටින රැඳවියන් සඳහා ආහාර සැපයීමේ කොන්ත්රාත්තුව භාරව කටයුතු කරන කොන්ත්රාත්කරුවන්ගෙන් රුපියල් දොළොස් ලක්ෂ තිස්පන්දහසක (1,235,000) මුදලක් අල්ලස් වශයෙන් ලබාගැනීමේ චෝදනාව මත මොහුව මෙලෙස අත්අඩංගුවට ගෙන ඇති බව වාර්තා වේ. බන්ධනාගාර පරිශ්රය තුළ සිදුකළ මෙම හදිසි වැටලීමේදී අත්අඩංගුවට ගත් සැකකාර සහකාර අධිකාරිවරයා සම්බන්ධයෙන් අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව විසින් ඉදිරි විමර්ශන කටයුතු පුළුල් ලෙස ක්රියාත්මක කර ඇත.
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දූෂණ විරෝධී සහ නීති පුවත්
An Assistant Superintendent of the Trincomalee Prison was taken into custody within the prison complex premises today (06) by officials of the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC).
The suspect was apprehended over allegations of accepting a financial bribe amounting to Rs. 1,235,000 from contractors supplying food provisions for incarcerated inmates. Following the specialized sting operation conducted within the correctional facility, investigators attached to the Bribery Commission are conducting further interrogations and formal procedures.
Reporter: Farhana Badurdeen
KR TV Network - Local News / Anti-Corruption and Law Enforcement

Comments