இலங்கையின் 2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள்: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ශ්රී ලංකාවේ 2026–2029 සංවර්ධන සැලසුම්: ආසියානු සංවර්ධන බැංකුව සහ ජනාධිපති ලේකම් කාර්යාලය අතර විශේෂ සාකච්ඡාවක් Sri Lanka’s 2026–2029 Development Framework: High-Level Consultation Held Between Presidential Secretariat and ADB
இலங்கையின் 2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள்: ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
ශ්රී ලංකාවේ 2026–2029 සංවර්ධන සැලසුම්: ආසියානු සංවර්ධන බැංකුව සහ ජනාධිපති ලේකම් කාර්යාලය අතර විශේෂ සාකච්ඡාවක්
Sri Lanka’s 2026–2029 Development Framework: High-Level Consultation Held Between Presidential Secretariat and ADB
இலங்கையின் பிரதான அபிவிருத்திப் பங்காளியான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 2026–2029 காலப்பகுதிக்கான நாட்டின் அபிவிருத்தித் திட்ட வரைபுகள் தொடர்பான உயர்மட்ட விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் இணைத் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஒக்டோபர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ மீளாய்வுக் கூட்டத்திற்கான பூர்வாங்க சந்திப்பாக இது அமைந்துள்ளது.
இச்சந்திப்பில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முக்கிய அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காணுதல், வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இலங்கை அரசாங்கத்தின் உரிமையை உறுதி செய்தல் மற்றும் அரச நடைமுறைகளுடன் வங்கியின் வழிமுறைகளை வினைத்திறனாக ஒருங்கிணைத்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட சலுகைக் கடன்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உரிய முறையில் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பதுடன், அரச நிதி இலக்குகளை விரைவாக அடைவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி மேலதிக செயலாளர் டப்ளியு. டி. ஆர். கிரிசாந்த, ஜனாதிபதி சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி தனுஷ்க பெரேரா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி விவகாரம்
ශ්රී ලංකාවේ ප්රධාන සංවර්ධන හවුල්කරුවෙකු වන ආසියානු සංවර්ධන බැංකුවේ (ADB) 2026–2029 කාලසීමාවට අදාළ ශ්රී ලංකා සංවර්ධන සැලසුම් පිළිබඳ විශේෂ ඉහළ පෙළේ සාකච්ඡාවක් පසුගියදා ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී පවත්වා තිබේ.
ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක සහ ආසියානු සංවර්ධන බැංකුවේ ශ්රී ලංකා නේවාසික අධ්යක්ෂිකා ෂැනන් කව්ලින් (Shannon Cowlin) යන මහත්ම මහත්මීන්ගේ සම සභාපතිත්වයෙන් මෙම හමුව පැවැත්විණි. ආසියානු සංවර්ධන බැංකුවේ 2027 වර්ෂය සඳහා වන වාර්ෂික වැඩසටහන ක්රියාත්මක කිරීම සම්බන්ධයෙන් 2026 ඔක්තෝබර් 05 සහ 06 යන දෙදින පැවැත්වෙන සැලසුම් සමාලෝචන රැස්වීමට පෙර සූදානමක් ලෙස මෙම සාකච්ඡාව සංවිධානය කර තිබුණි.
මෙහිදී ආසියානු සංවර්ධන බැංකුවේ දීර්ඝකාලීන ව්යාපෘති සඳහා ඇතුළත් කළ යුතු ප්රමුඛතා සංවර්ධන ව්යාපෘති හඳුනාගැනීම, ක්රියාත්මක කෙරෙන වැඩසටහන් සම්බන්ධයෙන් රජයේ පූර්ණ හිමිකාරිත්වය තහවුරු කිරීම මෙන්ම රාජ්ය යාන්ත්රණය සහ බැංකුවේ ක්රියාවලීන් අතර කාර්යක්ෂම සම්බන්ධීකරණයක් පවත්වාගෙන යාම පිළිබඳව විශේෂ අවධානයක් යොමු කෙරිණි. එමෙන්ම, සීමිත සහනදායී මූල්ය සම්පත් හා තාක්ෂණික සහාය ඵලදායී ලෙස භාවිත කරමින් රටේ ආර්ථික සංවර්ධන වේගය ඉහළ නැංවීම සහ රාජ්ය මූල්ය ඉලක්ක කඩිනමින් ළඟා කරගැනීමේදී මතුවන අභියෝග ජයගැනීමේ ක්රමවේද පිළිබඳව ද සාකච්ඡා විය. මෙම අවස්ථාවට ජනාධිපති අතිරේක ලේකම් ඩබ්ලිව්. ඩී. ආර්. ක්රිෂාන්ත, ජනාධිපති ජ්යෙෂ්ඨ සහකාර ලේකම් ආචාර්ය ධනුෂ්ක පෙරේරා සහ ආසියානු සංවර්ධන බැංකුවේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු සහභාගි වූහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ආර්ථික සහ සංවර්ධන පුවත්
A high-level strategic discussion on Sri Lanka’s development roadmap for the 2026–2029 operational cycle with the Asian Development Bank (ADB) was held at the Presidential Secretariat.
Co-chaired by Secretary to the President Dr Nandika Sanath Kumanayake and ADB Country Director for Sri Lanka Ms Shannon Cowlin, the meeting served as a consultative session ahead of the formal programme review meetings scheduled for 05 and 06 October 2026 regarding the operationalization of the ADB’s 2027 annual programme.
Deliberations centered on identifying priority infrastructure and socio-economic sectors for inclusion within the ADB’s long-term sovereign lending framework, reaffirming institutional government ownership over funded projects, and streamlining operational coordination between public sector processes and ADB guidelines. The officials also deliberated on optimizing the allocation of concessional financing envelopes and technical assistance to accelerate growth trajectories and meet national fiscal consolidation targets. Senior administrative officials including Additional Secretary to the President W. D. R. Krishantha and Senior Assistant Secretary Dr Danushka Perera alongside senior ADB technical representatives participated in the consultations.
KR TV Network - Local News / Economy and Development Affairs





Comments