நண்பனின் துரோகத்தால் சவுதியில் பலிகடாவான இந்திய இளைஞன்: 43 கிலோ போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றம் මිතුරෙකුගේ රැවටීමට හසුව සෞදියේදී බිලි වූ ඉන්දීය තරුණයා: මත්ද්රව්ය චෝදනාවට මරණ දණ්ඩනය ක්රියාත්මක කෙරෙයි Indian Youth Betrayed by Friend Executed in Saudi Arabia Over 43kg Narcotics Smuggling Charges
நண்பனின் துரோகத்தால் சவுதியில் பலிகடாவான இந்திய இளைஞன்: 43 கிலோ போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றம்
මිතුරෙකුගේ රැවටීමට හසුව සෞදියේදී බිලි වූ ඉන්දීය තරුණයා: මත්ද්රව්ය චෝදනාවට මරණ දණ්ඩනය ක්රියාත්මක කෙරෙයි
Indian Youth Betrayed by Friend Executed in Saudi Arabia Over 43kg Narcotics Smuggling Charges
நண்பனை நம்பி காரை ஓட்டிச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 43 கிலோ போதைப்பொருள் காரணமாக சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரளா மாநிலம் கண்ணூர், மாஹி பெருங்காடி பகுதியைச் சேர்ந்த அபு என்ற இளைஞர் ஓமன் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். அவரது விசா காலம் முடிவடைந்த நிலையில், அதனைச் சரிசெய்து தருவதாக அவரது நண்பன் ஒருவன் உறுதியளித்துள்ளான். அதற்காக ஒரு காரைக் கொடுத்து, சவுதி அரேபியா வழியாக பயணிக்குமாறும், சவுதிக்குச் சென்றடைந்ததும் அங்கிருந்து அவரை இந்தியாவிற்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துவிட்டு, காரை தான் மீண்டும் வந்து பெற்றுக் கொள்வதாகவும் அந்த நண்பன் கூறியுள்ளான். நண்பனின் வார்த்தையை முழுமையாக நம்பிய அபு அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு சவுதி நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
ஆனால் ஓமன் - சவுதி அரேபிய எல்லைப் பகுதியில் அமைந்த சோதனைச் சாவடியில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது, அபு ஓட்டிச் சென்ற வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் (Petrol tank) மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 43 கிலோ போதைப்பொருட்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அபு, தான் அறியாமலேயே நண்பனால் திட்டமிட்டுப் பலிகடா ஆக்கப்பட்டதை உணர்வதற்குள் சவுதி பொலிஸாரால் அந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தங்கள் குடும்பத்திற்கு ஒரே ஆதரவாக இருந்த தன் மகன் அபு முற்றிலும் நிரபராதி என்றும், நண்பனின் வஞ்சக வலையில் சிக்கிப் பலியாகிவிட்டதாகவும் கூறி அவரது தாய் ஷாஹிதா, மனைவி மற்றும் சகோதரிகள் கண்ணீர்மல்க நீதி கோரினர். அபுவின் உயிரைக் காப்பாற்ற சவுதியில் உள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்ச்சியாகக் கருணை மனுக்களை சமர்ப்பித்து தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சவுதி அரேபியாவின் கடுமையான சட்ட திட்டங்களின் கீழ் அபுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நண்பர்கள் அல்லது அறிமுகமில்லாதவர்களின் வாகனங்களை நம்பி ஓட்டிச் செல்வது எவ்வளவு பாரதூரமான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் எச்சரிக்கைச் சம்பவமாக இது அமைந்துள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேசச் செய்தி / குற்றவியல் மற்றும் சட்டம்
තම හිතවත් මිතුරෙකුගේ වංචනික ක්රියාවකට හසුව මත්ද්රව්ය ප්රවාහන චෝදනාවට ලක්වූ ඉන්දීය ජාතික තරුණයෙකුට සෞදි අරාබිය තුළ මරණ දණ්ඩනය ක්රියාත්මක කිරීමේ සිදුවීමක් දැඩි කම්පනයක් සහ ශෝකයක් මතුකර තිබේ.
ඉන්දියාවේ කේරළ ප්රාන්තයේ කන්නූර් දිස්ත්රික්කයේ පදිංචිකරුවෙකු වන අබු නමැති මෙම තරුණයා ඕමාන් රාජ්යයේ රැකියාවක නිරතව සිටියදී ඔහුගේ වීසා වලංගු කාලය අවසන් වී ඇත. එම වීසා ගැටලුව නිරාකරණය කර දෙන බවට පොරොන්දු වූ ඔහුගේ සමීප මිතුරෙකු විසින් ලබාදුන් වාහනයක් පදවාගෙන සෞදි අරාබිය හරහා ගමන් කරන ලෙස ඔහුට උපදෙස් දී තිබේ. සෞදි අරාබියට ළඟා වූ පසු ඔහු ඉන්දියාවට පිටත් කර යැවීමට කටයුතු සලසන බවත්, වාහනය තමා විසින් පසුව භාරගන්නා බවත් පැවසූ මිතුරාගේ ප්රකාශය විශ්වාස කරමින් අබු ගමන ආරම්භ කර ඇත.
නමුත් ඕමාන් - සෞදි දේශසීමා මුරපොළේදී ආරක්ෂක නිලධාරීන් විසින් සිදුකළ සෝදිසි මෙහෙයුමකදී, එම වාහනයේ ඉන්ධන ටැංකිය තුළ සූක්ෂ්ම ලෙස සඟවා තිබූ කිලෝග්රෑම් 43 ක අධික මත්ද්රව්ය තොගයක් සොයාගනු ලැබූ අතර, කිසිවක් නොදත් අබු එම ස්ථානයේදීම අත්අඩංගුවට පත්විය.
තම පවුලේ එකම ජීවනාලිය වූ තම පුත්රයා සම්පූර්ණයෙන්ම නිර්දෝෂී බවත්, මිතුරෙකුගේ ද්රෝහී උගුලකට හසුවූ බවත් පවසමින් ඔහුගේ මව වන ෂාහිදා ඇතුළු පවුලේ සාමාජිකයින් ඉන්දීය තානාපති කාර්යාලය හරහා සමාව අයැදීම් සිදුකරමින් දැඩි සටනක නිරත වූහ. කෙසේ වෙතත්, මත්ද්රව්ය ජාවාරමට එරෙහිව සෞදි අරාබියේ පවතින අතිශය දැඩි නීති රාමුව යටතේ අබු වෙත නියම වූ මරණ දණ්ඩනය පසුගියදා ක්රියාත්මක කර ඇත. විදේශ රටවලදී මිතුරන්ගේ හෝ නුහුරු පුද්ගලයන්ගේ වාහන මෙහෙයවීම කොතරම් අවදානම් සහගතද යන්න මෙමඟින් ප්රබල අනතුරු ඇඟවීමක් සිදුකරයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත් / අපරාධ සහ නීතිමය පුවත්
An Indian expatriate youth from Kerala has been executed under capital punishment laws in Saudi Arabia after unwittingly falling victim to a treacherous narcotics trafficking plot set up by a trusted friend.
The victim, identified as Abu from the Kannur district of Kerala, had been employed in Oman when his residency visa expired. Under the pretext of resolving his immigration difficulties, a friend provided him with an automobile and instructed him to drive across the border through Saudi Arabia, assuring him that he would be safely repatriated to India upon arrival while the vehicle would be reclaimed later. Placing blind trust in his acquaintance, Abu undertook the journey.
However, during rigorous border security inspections at the Oman-Saudi crossing, customs enforcement officers uncovered 43 kilograms of contraband illicit narcotics concealed inside the vehicle’s fuel tank, resulting in Abu's immediate arrest on the spot.
His mother Shahida, along with his wife and sisters, made desperate public appeals and submitted numerous mercy petitions through the Indian Embassy in Saudi Arabia, maintaining his complete innocence as an unwitting courier ensnared in a setup. Nonetheless, operating under the Kingdom's zero-tolerance legal statutes regarding drug offenses, Saudi authorities officially executed the death sentence. This tragic development serves as a stark warning regarding the severe legal perils of transporting unverified vehicles on behalf of acquaintances abroad.
KR TV Network - International News / Crime and Law Enforcement Affairs

Comments