Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடியின் மூத்தமகன் சட்டத்தரணி மர்ஹூம் அப்துல் ஜவாத் அவர்களின் வாழ்வியல் வரலாற்று நூல் வெளியீட்டு விழா ஹோட்டல் பீச்வேயில் மிகச் சிறப்பாக நடைபெற்றது කාත්තන්කුඩියේ ජ්‍යෙෂ්ඨ පුත්‍රයා නීතිඥ මර්හූම් අබ්දුල් ජවාඩ් මහතාගේ චරිතාපදාන කෘතිය එළිදැක්වීමේ උළෙල හෝටල් බීච්වේ හිදී අතිඋත්කර්ෂවත් අයුරින් පැවැත්වෙයි Book Launch Ceremony on Late Attorney-at-Law Abdul Jawad Successfully Held at Hotel Beachway in Kattankudy

 
















காத்தான்குடியின் மூத்தமகன் சட்டத்தரணி மர்ஹூம் அப்துல் ஜவாத் அவர்களின் வாழ்வியல் வரலாற்று நூல் வெளியீட்டு விழா ஹோட்டல் பீச்வேயில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

කාත්තන්කුඩියේ ජ්‍යෙෂ්ඨ පුත්‍රයා නීතිඥ මර්හූම් අබ්දුල් ජවාඩ් මහතාගේ චරිතාපදාන කෘතිය එළිදැක්වීමේ උළෙල හෝටල් බීච්වේ හිදී අතිඋත්කර්ෂවත් අයුරින් පැවැත්වෙයි

Book Launch Ceremony on Late Attorney-at-Law Abdul Jawad Successfully Held at Hotel Beachway in Kattankudy


காத்தான்குடி வரலாற்றில் தனித்துவமான சமூகப் பங்களிப்பை வழங்கிய சட்டத்தரணி மர்ஹூம் ஏ. எல். அப்துல் ஜவாத் அவர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தொகுப்பான "காத்தான்குடியின் மூத்தமகன் அப்துல் ஜவாத் சேர் - ஆளுமையும் முன்மாதிரிகளும்" எனும் நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ. அகமட் லெப்பை ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு அந்நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான எஸ். எல். அப்துல் கபூர் தலைமை தாங்கினார். ஓய்வுநிலை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதவான் அல்ஹாஜ் ரி. எல். அப்துல் மனாப் முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் இந்நாள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.


காத்தான்குடியின் பாதுகாப்பு, பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக அரும்பணியாற்றிய சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களின் சமூக அர்ப்பணிப்புகள், தியாகங்கள் மற்றும் வரலாற்று நினைவுகள் குறித்து வருகை தந்த அதிதிகளால் மிக உருக்கமான உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், அன்னாரின் மறுமை வாழ்விற்கான விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. சமூக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்நிகழ்வு, மறைந்த பெருமகனாரின் ஆளுமையை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சமூகம், இலக்கியம் மற்றும் கலாசாரம்


කාත්තන්කුඩි ඉතිහාසය තුළ සුවිශේෂී සමාජ මෙහෙවරක් ඉටුකළ නීතිඥ මර්හූම් ඒ. එල්. අබ්දුල් ජවාඩ් මහතාගේ ජීවන චරිතාපදානය ඇතුළත් "කාත්තන්කුඩියේ ජ්‍යෙෂ්ඨ පුත්‍රයා අබ්දුල් ජවාඩ් සර් - පෞරුෂය සහ ආදර්ශයන්" නැමැති ග්‍රන්ථය එළිදැක්වීමේ උත්සවය කාත්තන්කුඩි හෝටල් බීච්වේ ශාලාවේදී අතිඋත්කර්ෂවත් අයුරින් පැවැත්විණි.


අෂ්ෂහීඩ් අල්හාජ් ඒ. අහමඩ් ලෙබ්බේ අනුස්මරණ පදනම මඟින් සංවිධානය කරන ලද මෙම උත්සවයේ මුලසුන එම පදනමේ ගරු සභාපති විශ්‍රාමික විදුහල්පති එස්. එල්. අබ්දුල් කපූර් මහතා විසින් හොබවන ලද අතර, විශ්‍රාමික සිවිල් අභියාචනා මහාධිකරණ විනිසුරු අල්හාජ් ටී. එල්. අබ්දුල් මනාෆ් මහතා ප්‍රධාන ආරාධිතයා ලෙස සහභාගී විය. මෙම අවස්ථාවට වත්මන් සහ හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්, දේශපාලන නායකයින්, නීතිඥයින්, පොදු ආයතන නියෝජිතයින්, ව්‍යාපාරිකයින්, මාධ්‍යවේදීන් මෙන්ම ප්‍රදේශවාසීන් විශාල පිරිසක් එක්ව සිටියහ.


කාත්තන්කුඩි ප්‍රදේශයේ ආරක්ෂාව, සංවර්ධනය සහ පොදු සුබසාධනය වෙනුවෙන් කැපවූ නීතිඥ අබ්දුල් ජවාඩ් මහතාගේ ජීවන මතකයන් සහ සේවාවන් පිළිබඳව පැමිණ සිටි ආරාධිතයින් විසින් ඉතා සංවේදී අදහස් දැක්වීම් සිදුකළ අතර, ඒ මහතා වෙනුවෙන් විශේෂ ආශිර්වාද ප්‍රාර්ථනාවන් ද මෙහිදී සිදුකෙරිණි. ප්‍රදේශයේ ඉතිහාසය තුළ සුවිශේෂී සන්ධිස්ථානයක් සනිටුහන් කරමින් මෙම ග්‍රන්ථ එළිදැක්වීම සාර්ථකව නිමාවට පත්විය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / සමාජ, සාහිත්‍ය සහ සංස්කෘතික පුවත්


The launch of the biographical publication titled "Eldest Son of Kattankudy Abdul Jawad Sir - Personality and Role Models", which documents the dedicated social contributions of the late Attorney-at-Law A. L. Abdul Jawad, was successfully held at Hotel Beachway in Kattankudy.


Organized by the Ash-Shaheed Al-Haj A. Ahamed Lebbe Memorial Foundation, the ceremony was presided over by the Foundation's President, Retired Principal S. L. Abdul Gafoor, with retired Civil Appellate High Court Judge Al-Haj T. L. Abdul Manaf gracing the occasion as Chief Guest. The event drew a large distinguished gathering, including current and former Members of Parliament, political leaders, legal professionals, community institution representatives, business leaders, media personnel, and numerous residents of the area.


Dignitaries addressing the gathering delivered heartfelt and emotionally resonant reflections commemorating late Attorney-at-Law Abdul Jawad's pivotal leadership in safeguarding civil stability, regional development, and mosque federation affairs, followed by collective prayers for his eternal peace. Marking a significant literary and historical milestone for the region, the successful launch serves as an inspiring documentation of his dedicated civic legacy for future generations.


KR TV Network - Local News / Community, Literature, and Cultural Affairs

Comments