புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மஹல்லா மாணவர்களின் தகவல்கள் சேகரிப்பு: தகுதியுடையோரை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நிர்வாக சபை அறிவிப்பு නව කාත්තන්කුඩි මහා ජුම්ආ පල්ලියේ මහල්ලාවේ දක්ෂ සිසුන්ගේ තොරතුරු රැස්කිරීම: සුදුසුකම්ලත් සිසුන්ගෙන් ලේඛන ඉල්ලයි New Kattankudy Grand Jummah Mosque Collects Data of High-Achieving Students: Eligible Candidates Urged to Submit Documents
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மஹல்லா மாணவர்களின் தகவல்கள் சேகரிப்பு: தகுதியுடையோரை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நிர்வாக சபை அறிவிப்பு
නව කාත්තන්කුඩි මහා ජුම්ආ පල්ලියේ මහල්ලාවේ දක්ෂ සිසුන්ගේ තොරතුරු රැස්කිරීම: සුදුසුකම්ලත් සිසුන්ගෙන් ලේඛන ඉල්ලයි
New Kattankudy Grand Jummah Mosque Collects Data of High-Achieving Students: Eligible Candidates Urged to Submit Documents
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த திறமைமிக்க மாணவ, மாணவிகளின் விபரங்களைத் திரட்டும் விசேட திட்டமொன்றை பள்ளிவாயல் நிர்வாக சபை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை - 2025 இல் 8A அல்லது 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் இச்செயற்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர். தகுதியுடைய மாணவர்கள் தங்களின் முழுப்பெயர், முகவரி, மஹல்லா குடும்ப அட்டை இலக்கம், தொடர்பு விபரங்கள் மற்றும் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள், பல்கலைக்கழக உள்நுழைவுக் கடிதம் ஆகியவற்றின் தெளிவான பிரதிகளை எதிர்வரும் 2026 ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் 075 425 7884 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு பள்ளிவாயல் நிர்வாக சபை அன்புடன் கோரியுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / கல்வி மற்றும் சமூக மேம்பாடு
නව කාත්තන්කුඩි මහා ජුම්ආ පල්ලියේ මහල්ලා බලප්රදේශයට අයත් දක්ෂ සිසු දරු දැරියන්ගේ තොරතුරු රැස්කිරීමේ විශේෂ වැඩසටහනක් එම පල්ලි පාලක සභාව මඟින් නිල වශයෙන් ආරම්භ කර තිබේ.
2025 අ.පො.ස. සාමාන්ය පෙළ විභාගයෙන් විශිෂ්ට සාමාර්ථ (8A හෝ 9A) ලබාගත් සිසුන් සහ 2025 අ.පො.ස. උසස් පෙළ විභාගයෙන් සමත්ව විශ්වවිද්යාල ප්රවේශය ලැබූ සිසු දරු දැරියන්ගේ දත්ත මෙලෙස එක්රැස් කෙරේ. සුදුසුකම් සපුරා ඇති සිසුන් සිය සම්පූර්ණ නම, ලිපිනය, මහල්ලා පවුල් කාඩ්පත් අංකය, විභාග ප්රතිඵල ලේඛන සහ විශ්වවිද්යාල ප්රවේශ ලිපියේ පැහැදිලි ඡායාරූප හෝ PDF පිටපත් 2026 ඔක්තෝබර් මස 15 වන දිනට පෙර 075 425 7884 යන වට්ස්ඇප් (WhatsApp) අංකයට යොමුකරන ලෙස පල්ලි පාලක සභාව ඉල්ලා සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධ්යාපනික සහ ප්රජා සත්කාරක පුවත්
The Board of Trustees of the New Kattankudy Grand Jummah Mosque has initiated an official documentation process to collect data on high-achieving students residing within its Mahalla jurisdiction.
The initiative invites applications from students who secured 8A or 9A passes in the G.C.E. Ordinary Level Examination - 2025, as well as those who qualified and gained university admission through the G.C.E. Advanced Level Examination - 2025. Eligible students are instructed to submit their complete details, address, Mahalla family card number, contact information, and clear copies of their result sheets alongside university admission letters via WhatsApp to 075 425 7884 on or before October 15, 2026.
KR TV Network - Local News / Education and Community Development

Comments