Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தேசியமட்டப் பெண்கள் உதைபந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஹாட்ரிக் சம்பியன்: பொலன்னறுவை றோயல் கல்லூரியை வீழ்த்தி சாதனை ජාතික පාසල් පාපන්දු තරගාවලියේදී තෙල්ලිප්පලෙයි මහාජන විද්‍යාලීය බාලිකා කණ්ඩායම පිට පිට තෙවන වරටත් ශූරතාව දිනයි Tellippalai Mahajana College Clinches National U20 Girls' Football Championship for Third Consecutive Year


 தேசியமட்டப் பெண்கள் உதைபந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி ஹாட்ரிக் சம்பியன்: பொலன்னறுவை றோயல் கல்லூரியை வீழ்த்தி சாதனை

ජාතික පාසල් පාපන්දු තරගාවලියේදී තෙල්ලිප්පලෙයි මහාජන විද්‍යාලීය බාලිකා කණ්ඩායම පිට පිට තෙවන වරටත් ශූරතාව දිනයි

Tellippalai Mahajana College Clinches National U20 Girls' Football Championship for Third Consecutive Year


கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.


யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் பொலன்னறுவை றோயல் கல்லூரி அணியை எதிர்த்துத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி பலப்பரீட்சை நடத்தியது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், போட்டியின் முழு நேர நிறைவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக சம்பியன் கிண்ணத்தை வென்று ஹாட்ரிக் சாதனையுடன் தேசிய மட்டத்தில் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / விளையாட்டு விவகாரம்


අධ්‍යාපන අමාත්‍යාංශය මඟින් සංවිධානය කරන ලද සමස්ත ලංකා පාසල් වයස අවුරුදු 20න් පහළ බාලිකා ජාතික පාපන්දු තරගාවලියේදී ඓතිහාසික ජයක් වාර්තා කිරීමට යාපනය තෙල්ලිප්පලෙයි මහාජන විද්‍යාලීය කණ්ඩායම සමත්විය.


යාපනය මධ්‍ය මහා විද්‍යාලීය ක්‍රීඩාංගණයේදී පැවති අවසන් මහා තරගයේදී පොළොන්නරුව රාජකීය විද්‍යාලීය කණ්ඩායම සමඟ තරග වැදුණු තෙල්ලිප්පලෙයි මහාජන විද්‍යාලීය ක්‍රීඩිකාවෝ ගෝල 1-0ක් ලෙස තියුණු ජයග්‍රහණයක් අත්කර ගත්හ. මෙම විශිෂ්ට ජයග්‍රහණයත් සමඟ 2024, 2025 සහ 2026 යන වසර තුනේදීම පිට පිටම ජාතික ශූරතාව දිනාගනිමින් පාසල් පාපන්දු ඉතිහාසය අලුත් කිරීමට තෙල්ලිප්පලෙයි මහාජන විද්‍යාලය සමත්ව ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ක්‍රීඩා පුවත්


Tellippalai Mahajana College from Jaffna etched their name in school sports history by clinching the All-Island Under-20 Girls' National Football Championship for the third consecutive year.


Organized by the Ministry of Education, the grand final was held at the Jaffna Central College grounds, where Tellippalai Mahajana College faced off against Polonnaruwa Royal College. Following an intense battle on the pitch, Mahajana College sealed a dramatic 1-0 victory over their opponents. This triumph marks their third successive national title across 2024, 2025, and 2026, establishing an extraordinary championship hat-trick in national schools football.


KR TV Network - Local News / Sports Affairs

Comments