சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த இலங்கை தொழிலாளியின் நிலை குறித்து உடனடி நடவடிக்கை – இலங்கை தூதரகத்தின் துரித செயல்பாட்டுக்கு KR TV Network நன்றி தெரிவிப்பு.
சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த இலங்கை தொழிலாளியின் நிலை குறித்து உடனடி நடவடிக்கை – இலங்கை தூதரகத்தின் துரித செயல்பாட்டுக்கு KR TV Network நன்றி தெரிவிப்பு.
சவுதி அரேபியாவில் சுமார் 14 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இலங்கை தொழிலாளர் ஒருவர் தனது நிலை குறித்து எமது KR TV Network ஊடகத்துடன் தொடர்புகொண்டு உதவி கோரியிருந்தார்.
குறித்த சகோதரர் சுமார் 14 வருடங்களுக்கு முன்னர் கட்டார் சென்றதாகவும், பின்னர் தனது எஜமானால் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பாலைவனப் பகுதியில் ஒட்டகங்களை மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சுமார் நான்கு மாதங்கள் மாத்திரமே தனது எஜமான் தன்னை வந்து பார்த்ததாகவும், அதன் பின்னர் அவருடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். தனது வசம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், இலங்கைக்கு திரும்புவதற்காக பல்வேறு இடங்களில் கடுமையாக உழைத்து பலமுறை முயற்சித்தும் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது தான் நோய்வாய்ப்பட்டுள்ளதால் எப்படியாவது இலங்கைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தனது குடும்பத்தினர் குறித்த கவலை தனக்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் எமது ஊடகத்திடம் தெரிவித்தார். குறிப்பாக திருமண வயதை அடைந்துள்ள தனது மகள், தந்தை நாடு திரும்பிய பின்னரே தனது திருமணம் நடைபெறும் எனக் கூறியிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவரது ஊரைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் எமது ஊடகம் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர், தாமதமின்றி சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவரது நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்தது.
அத்துடன், இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் கௌரவ ஓ.எல். அமீர் அஜ்வத் அவர்களுக்கும் WhatsApp ஊடாக அவரது நிலைமை தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டன.
இந்த தகவல் அனுப்பப்பட்ட சுமார் ஐந்து நிமிடங்களுக்குள் இலங்கை தூதரகத்திலிருந்து எமது தொலைபேசிக்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தூதுவர் அவர்களின் பணிப்பின் பேரில் குறித்த தொழிலாளியின் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தூதரக அதிகாரிகள் எமக்கு தெரிவித்தனர்.
மேலும், குறித்த நபர் ஏற்கனவே தூதரகத்துடன் தொடர்பில் இருந்த நிலையில், அவரது விடயங்களை கவனித்து வரும் பொறுப்பான அதிகாரியுடன் எமது ஊடகத்தையும் தொலைபேசி மாநாட்டின் மூலம் தொடர்புபடுத்தி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
அவரது பிரச்சினையை முடிந்தவரை விரைவாகத் தீர்த்து, நாட்டுக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தூதரகத்தினால் எமது ஊடகத்திற்கு உறுதியளிக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு மனிதாபிமான விடயத்தில் எமது ஊடகத்தின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்து, துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க பணிப்புரை வழங்கிய கௌரவ தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் அவர்களுக்கும் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் KR TV Network சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கைத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள இலங்கை தூதரகங்களும் இதுபோன்று மக்களின் பிரச்சினைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதே எமது ஊடகத்தின் தாழ்மையான வேண்டுகோளாகும்.
குறிப்பாக, சவுதி அரேபியாவில் இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் “மாதத்தில் ஒரு நாள் தூதுவருடன் உரையாடலாம்” போன்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் ஏனைய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவதற்கான பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
மக்களின் குரலாக செயற்படும் ஊடகங்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, மனிதாபிமான அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க முன்வந்தமைக்காக மீண்டும் ஒருமுறை கௌரவ தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் அவர்களுக்கும் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் KR TV Network சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
KR TV NETWORK www.krtvlankanvoice.lk
Sri Lankan Worker Stranded in Saudi Arabia for 14 Years: Sri Lankan Embassy Takes Immediate Action Following KR TV Network Intervention
A Sri Lankan worker who has been facing severe difficulties in Saudi Arabia for nearly 14 years contacted KR TV Network and appealed for assistance to return to Sri Lanka.
According to the information provided to our media organisation, the man travelled to Qatar approximately 14 years ago. He was later taken from Qatar to Saudi Arabia by his employer and was reportedly employed as a camel herder in a desert area.
He stated that his employer visited him for only around four months and that contact was subsequently lost. Without proper documents, he made several attempts to return to Sri Lanka while working at different places under extremely difficult circumstances, but was unable to return home.
The worker also informed KR TV Network that he is currently suffering from health problems and is now in a situation where he urgently needs to return to Sri Lanka. He expressed deep concern about his family, particularly his daughter of marriageable age, who has reportedly told him that she would proceed with her marriage only after her father returns home.
After verifying the information with key individuals from his hometown and members of his family, KR TV Network immediately contacted the Sri Lankan Embassy in Saudi Arabia and explained the worker’s situation in detail.
The matter was also brought to the attention of Sri Lanka’s Ambassador to Saudi Arabia, His Excellency O.L. Ameer Ajwad, through WhatsApp, with a detailed explanation of the worker’s circumstances.
Remarkably, approximately five minutes after the message was sent, the Sri Lankan Embassy contacted KR TV Network by telephone and informed us that immediate action would be taken on the instructions of the Ambassador.
As the worker had already been in contact with the Embassy, KR TV Network was also connected through a conference call with the officer responsible for handling his case. An explanation was provided regarding the current status of the steps being taken to resolve his situation.
The Embassy further assured KR TV Network that every possible effort would be made to resolve the worker’s difficulties as quickly as possible and facilitate his return to Sri Lanka.
KR TV Network sincerely appreciates and extends its gratitude to His Excellency Ambassador O.L. Ameer Ajwad and the officials of the Sri Lankan Embassy in Saudi Arabia for responding promptly to our request and taking immediate steps on this humanitarian matter.
Thousands of Sri Lankan workers live and work overseas, and many face various difficulties relating to employment, documentation, legal status and repatriation. KR TV Network respectfully appeals to all Sri Lankan diplomatic missions around the world to strengthen mechanisms that allow them to respond quickly and effectively to the concerns of Sri Lankan citizens.
Programmes such as “A Day to Speak with the Ambassador”, conducted by the Sri Lankan Embassy in Saudi Arabia, should also be introduced and strengthened at Sri Lankan diplomatic missions in other countries. Such initiatives can provide overseas workers with a direct opportunity to present their concerns and seek timely solutions.
KR TV Network once again expresses its sincere appreciation to His Excellency Ambassador O.L. Ameer Ajwad and the Sri Lankan Embassy in Saudi Arabia for respecting our media organisation’s request and directing officials to take immediate action to assist a Sri Lankan citizen in distress.
KR TV NETWORK www.krtvlankanvoice.lk
සෞදි අරාබියේ වසර 14ක් අසරණව සිටි ශ්රී ලාංකික ශ්රමිකයෙකු වෙනුවෙන් KR TV Network මැදිහත් වෙයි – ශ්රී ලංකා තානාපති කාර්යාලයෙන් කඩිනම් පියවර
වසර 14කට ආසන්න කාලයක් සෞදි අරාබියේ විවිධ දුෂ්කරතාවලට මුහුණ දෙමින් සිටින ශ්රී ලාංකික ශ්රමිකයෙකු සිය තත්ත්වය පිළිබඳව KR TV Network සමඟ සම්බන්ධ වී සහාය ඉල්ලා සිටියේය.
අදාළ ශ්රමිකයා මීට වසර 14කට පමණ පෙර කටාර් රාජ්යයට ගොස් ඇති අතර පසුව ඔහුගේ සේවායෝජකයා විසින් සෞදි අරාබියට රැගෙන ගොස් කාන්තාර ප්රදේශයක ඔටුවන් රැකබලා ගැනීමේ රැකියාවක යොදවා ඇති බව ඔහු සඳහන් කළේය.
මාස හතරක පමණ කාලයක් පමණක් තම සේවායෝජකයා තමන්ව බැලීමට පැමිණ ඇති බවත්, ඉන් පසුව ඔහු සමඟ කිසිදු සම්බන්ධතාවක් නොතිබූ බවත් ඔහු පැවසීය.
නිසි ලේඛන කිසිවක් තමන් සතුව නොමැති තත්ත්වයක් තුළ ශ්රී ලංකාවට පැමිණීම සඳහා අවස්ථා කිහිපයකදීම උත්සාහ කර ඇති නමුත්, විවිධ ස්ථානවල දුෂ්කරතා මධ්යයේ රැකියාවල නිරත වෙමින් සිටියද නැවත රටට පැමිණීමට නොහැකි වූ බවද ඔහු සඳහන් කළේය.
මේ වන විට තමන් රෝගාතුරව සිටින බැවින් කෙසේ හෝ ශ්රී ලංකාවට පැමිණීමට අවශ්ය තත්ත්වයක් උද්ගත වී ඇති බවත්, විවාහ වයසේ පසුවන තම දියණිය තමන් ශ්රී ලංකාවට පැමිණීමෙන් පසුව පමණක් විවාහ වන බව පවසා ඇති බවත් ඔහු KR TV Network වෙත පැවසීය.
මෙම තොරතුරු සම්බන්ධයෙන් ඔහුගේ ගම් ප්රදේශයේ ප්රධාන පුද්ගලයන් සහ පවුලේ සාමාජිකයන්ගෙන් තොරතුරු තහවුරු කර ගැනීමෙන් අනතුරුව KR TV Network විසින් වහාම සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සමඟ සම්බන්ධ වී ඔහු මුහුණ දී ඇති තත්ත්වය පිළිබඳව දැනුම් දෙන ලදී.
එමෙන්ම සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ගරු ඕ.එල්. අමීර් අජ්වාඩ් මහතා වෙතද WhatsApp ඔස්සේ මෙම සිද්ධිය පිළිබඳව සවිස්තරාත්මකව දැනුම් දෙන ලදී.
එම පණිවිඩය යවා විනාඩි පහක් පමණ ගතවීමට පෙර ශ්රී ලංකා තානාපති කාර්යාලයෙන් KR TV Network වෙත දුරකථන ඇමතුමක් ලබා දී, තානාපතිවරයාගේ උපදෙස් මත අදාළ ශ්රමිකයා වෙනුවෙන් කඩිනම් පියවර ගන්නා බව දැනුම් දෙන ලදී.
අදාළ ශ්රමිකයා මීට පෙරද තානාපති කාර්යාලය සමඟ සම්බන්ධ වී තිබූ බැවින්, ඔහුගේ සිද්ධිය භාරව කටයුතු කරන නිලධාරියා සමඟ KR TV Network ද සම්මන්ත්රණ දුරකථන ඇමතුමක් ඔස්සේ සම්බන්ධ කරනු ලැබීය. එහිදී මේ වන විට ගෙන ඇති පියවර සහ සිද්ධියේ වත්මන් තත්ත්වය පිළිබඳව අප වෙත පැහැදිලි කිරීමක් ලබා දෙන ලදී.
ඔහුගේ ගැටලුව හැකි ඉක්මනින් විසඳා ශ්රී ලංකාවට පැමිණීමට අවශ්ය පහසුකම් සලසා දීම සඳහා උපරිමයෙන් කටයුතු කරන බවද තානාපති කාර්යාලය KR TV Network වෙත සහතික විය.
මෙවැනි මානුෂීය කාරණයකදී අපගේ ඉල්ලීමට ක්ෂණිකව ප්රතිචාර දක්වා අදාළ ශ්රමිකයා වෙනුවෙන් කඩිනම් පියවර ගැනීමට උපදෙස් ලබා දීම සම්බන්ධයෙන් සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ගරු ඕ.එල්. අමීර් අජ්වාඩ් මහතාටත්, ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ නිලධාරීන්ටත් KR TV Network හි හෘදයාංගම ස්තූතිය පළ කරමු.
විදේශ රටවල සේවය කරන ශ්රී ලාංකික ශ්රමිකයන් විවිධ ගැටලුවලට මුහුණ දෙන බැවින්, ලොව පුරා පිහිටි සියලුම ශ්රී ලංකා තානාපති කාර්යාලද මෙවැනි ආකාරයෙන් ජනතාවගේ ගැටලු සඳහා කඩිනම් ප්රතිචාර දැක්වීමට කටයුතු කළ යුතු බවට KR TV Network විසින් ගෞරවයෙන් ඉල්ලා සිටී.
විශේෂයෙන් සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති කාර්යාලය මගින් ක්රියාත්මක කරන “තානාපතිවරයා සමඟ මාසයකට එක් දිනක් කතා කරමු” වැනි ජනතා සම්බන්ධතා වැඩසටහන් අනෙකුත් රටවල පිහිටි ශ්රී ලංකා තානාපති කාර්යාලවලද ක්රියාත්මක කර, විදේශගත ශ්රී ලාංකික ශ්රමිකයන්ගේ ගැටලු සෘජුවම ඉදිරිපත් කර විසඳුම් ලබාගැනීමට අවශ්ය අවස්ථා තවදුරටත් ශක්තිමත් කළ යුතුය.
ජනතාවගේ හඬ වෙනුවෙන් කටයුතු කරන මාධ්ය ආයතනයක් ලෙස KR TV Network ඉදිරිපත් කළ ඉල්ලීමට ගරු කරමින්, අසරණ තත්ත්වයක සිටින ශ්රී ලාංකිකයෙකු වෙනුවෙන් කඩිනම් පියවර ගැනීමට කටයුතු කළ ගරු තානාපති ඕ.එල්. අමීර් අජ්වාඩ් මහතාට සහ සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති කාර්යාලයට නැවතත් අපගේ ස්තූතිය පළ කරමු.
KR TV NETWORK www.krtvlankanvoice.lk

Comments